வாணியம்பாடி: வாணியம்பாடியின் 1903-ஆம் ஆண்டு வெள்ளப் பேரழிவு குறித்த வரலாற்று நூல் வெளியீடு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், 1903-ல் பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் குறித்த நூல் வெளியீட்டு விழா அஞ்சுமனே குத்தாமுல் இஸ்லாம் சார்பில் நடைபெற்றது. எழுத்தாளர் ஏசான் அஹமத் எழுதிய இந்த வரலாற்று நூல், அப்போதைய வெள்ளப் பேரழிவின் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.