விருத்தாசலம்: விருத்தாச்சலத்தில் 30ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்-திமுகவினர் திரளாக பங்கேற்க அமைச்சர் சி.வெ.கணேசன் வேண்டுகோள்
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 30 ம் தேதி விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அமைச்சரும்,திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் அழைப்பு அறிக்கை விடுத்துள்ளார்.