விருத்தாசலம்: விருத்தாசலம்:நிதிநத்தம் கிராமத்தில் மருமகனை அடித்து கொன்ற மாமனாருக்கு விருத்தாசலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்தது
நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குடும்ப தகராறில் தனது மருமகன் ரகுபதி என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்தார், இதன் பேரில் ஆவினங்குடி போலிசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கில் விருத்தாசலம் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாசந்திரன் தலைமையில் இன்று செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.