விருத்தாசலம்: நிதிநத்தம் கிராமத்தில் மருமகனை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
திட்டக்குடி வட்டம், நிதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ரகுபதி. இவரது மனைவி சத்யா. ரகுபதி மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் சத்யாவின் தாய் தந்தை (55) ஆகியோா் இதை கண்டித்தனர். அப்போது, ரகுபதி தனது மாமியாா் சசிகலாவையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரை தாக்கியதில் ரகுபதி உயிரிழந்தார். இவ்வழக்கில் இன்று மாமனார் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.