விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த விசலூர் கிராமத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்
மங்கலம்பேட்டை அருகில் உள்ள விசலூர் கிராமத்தில் வடக்கு தெருவில் வசிக்கும் ராஜா என்பவருடைய மகள் குப்பன் என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் அவ்வழியாக சென்ற போது கால் தவறி விழுந்துள்ளார். இது குறித்து உடனடியாக மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை ஒரு மணி நேரம் போராடி மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்