விருத்தாசலம்: பாலூர் அருகே பர்னிச்சர் கடையில் மரப்பலகைக்குள் இருந்த கொடிய விஷமுடைய 4 அடி நீளமுள்ள தலைகட்டு கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
பண்ருட்டி அடுத்த பாலூர் பகுதியில் பர்னிச்சர் கடையில் பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு கடையின் உரிமையாளர், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள வன ஆர்வலரும்,பாம்பு பிடி வீரருமான உமர் அலி என்பவருக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் உமர் அலி பர்னிச்சர் கடையில் மரப்பலகைகள் அடியில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட அந்த பாம்பு சுமார் 4அடி நீளமுள்ள கொடிய விஷம் உடைய தலைக்கட்டு கண்ணாடிவிரியன் பாம்பு என்பது தெரியவந்ததையடுத்து பாதுகாப்பாக காப்பு காட்டிற்க்குள் கொண்டு சென்றார்.