பண்ருட்டி: திருமலை நகர் பகுதியில் அதிமுக - தேமுதிக கூட்டணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்
கடலூர் தொகுதி அதிமுக - தேமுதிக கூட்டணி பாராளுமன்ற வேட்பாளர் சிவக்கொழுந்து அறிமுக கூட்டம் திருமலை நகரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் வேட்பாளர் சிவகொழுந்திவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் நாளை நமதே நாப்பதும் நமதே என்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என பேசினர்.