காட்பாடி: அரசுப் பள்ளிகள் மூடப்படமாட்டாது - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்!
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என்று உறுதி அளித்துள்ளார். மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகையை உறுதி செய்யும் ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும், கல்வி மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.