செங்கல்பட்டு: 5 ஆண்டுகளாக கிடப்பில் அச்சிறுபாக்கம் புதிய தாலுகா கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை பிரித்து அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.