பழனி: பழனியில் ரயிலில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 இளைஞர்கள் அதிரடி கைது!
ஒடிசாவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 19 மற்றும் 23 வயதுடைய 3 இளைஞர்களை பழனி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 545 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.