பண்ருட்டி: பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சார்ந்த வாலிபர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவலில் கைது
பெரியகாட்டுபாளையம் பகுதியில் பாண்டியன் ஜெய்சங்கர் தரப்பினருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் சுதாகர் மற்றும் சிலர் சென்று பாண்டியன் மற்றும் ஜெய்சங்கர் வீட்டிற்கு சென்று பொருட்கள், வாகனங்களை சூறையாடி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகார் பேரில் போலீசார் பெரியகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் சுதாகர் கைது செய்த நிலையில், அவர் மீது காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.