பண்ருட்டி: வரக்கால்பட்டு பகுதியில் 90 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் தயாளன்(60). இவரது வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் சீனுவாசன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் தலைமையில் உளவு பிரிவு காவலர் தண்டபாணி மற்றும் தலைமை காவலர் சக்திவேல் உள்பட காவலர்கள் மேற்படி நபரின் வீட்டை சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 32கிலோ எடை கொண்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்