பண்ருட்டி: கோ.சத்திரம் கூட்ரோடு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹80,040 பணம் பறிமுதல்
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோ.சத்திரம் கூட்டுரோடு அருகே துணை மாநில வரி அலுவலர் சந்தானம் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் கொண்டு வந்த ₹80040 பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பணம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது.