பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எலவத்தடி பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம் செய்தார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக முன்னாள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகின்றார. இதனையடுத்து அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலவத்தடி பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்