பழனி: பழனி கோயிலில் ரோப்கார் அவசரகால மீட்பு மாதிரி ஒத்திகை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் நடுவழியில் நின்றால் பயணிகளை மீட்கும் முறைகள் குறித்த மாதிரி ஒத்திகை நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் NDRF வீரர்கள் இணைந்து கயிறு மற்றும் நவீன உபகரணங்கள் மூலம் பக்தர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பயிற்சிகளைச் செய்து காட்டினர்.