நாங்குநேரி: சீவலப்பேரி அருகே கஞ்சா விற்பனை: 4 பேர் அதிரடி கைது!
கான்சாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை சீவலப்பேரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.19 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால், அவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.