பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் குழந்தைகள் தினம் மற்றும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.