பெரியகுளம்: மேல்மங்கலத்தில் சித்த மருத்துவ முகாம்: 245 பேர் பயன்பெறல்
தேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில், 245 பொதுமக்கள் பயனடைந்தனர். இதில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் 3,000 ரூபாய் மதிப்பிலான மருந்துகள் வழங்கப்பட்டன.