சாத்தான்குளம்: பன்னம்பாறை மாடத்தி அம்மன் கோவில் விலக்கு பகுதியில் பாழடைந்த நிலையில் பேருந்து நிறுத்தம்#localissue
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள பன்னம்பாறை மாடத்தி அம்மன் கோவில் விலக்கு பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் சிதலமடைந்து முற்புதர்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்தாமல் வெயில் மற்றும் மழை காலங்களில் அங்கிருந்து தள்ளி நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.