சாத்தான்குளம்: சங்கரலிங்க சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் சங்கரநயினார் புரம் சங்கரலிங்க சுவாமி சமேத கோமதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. விழாவில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், பல்வேறு அபிஷேகங்களும் நடந்தது. தொடர்ந்து கோபுர விமானத்திற்கும், சுவாமி மற்றும் அம்பாளுக்கு புனித நீரூற்றி சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரதனை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.