சாத்தான்குளம்: சொக்கலிங்கபுரத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்த நபரால் பரபரப்பு - ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொக்கலிங்க புரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த ஊரில் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக ஊருக்கு வெளிப்புறத்தில் சுடுகாடு உள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலி போட்டுள்ளார்.