சாத்தான்குளம்: நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி
தட்டார்மடம் அருகில் உள்ள கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி மகேஸ்வரி. இவர் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி வகுப்பிற்கு தேர்வாகி, அங்கு பயிற்சி பெற்று ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றார். இவரின் இச்சாதனையை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது