திருச்செங்கோடு: 84 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.31 கோடி கடன் உதவி
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 84 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 9.31 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பினை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் வழங்கினார். பெண்களின் முன்னேற்றமே சமுதாயத்தின் வளர்ச்சி என அவர் வலியுறுத்தினார்.