செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்: கூடுதல் பேருந்துகள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகளால் நெரிசல் ஏற்பட்டது. போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்த நிலையில், போக்குவரத்து துறை செயலர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார்.