நபிகள் நாயகன் பேரனான அசின் உசேன் போரில் உயிரிழந்ததன் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் மொகரம் பண்டிகையான இன்று சியாம் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் அண்ணான்டப்படி கூட்ரோடு பகுதியில் இருந்து ஹயாத் நகர் வரை தங்களது உடல்களை பிளேடால் அறுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர்.மேலும் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது