பண்ருட்டி: சிறுவத்தூர் பகுதியில் தாய் திட்டியதாக பூச்சி மருத்து குடித்து சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தாய் திட்டியதாக பூச்சி மருந்தை உட்கொண்ட நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.