கீழ்வேளூர்: நாகை அருகே 30 ஆண்டுகளாக சாலை இல்லை: கப்பி கற்களுடன் பெண்கள் நூதன போராட்டம்
நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிழக்கு பகுதியில் சாலை வசதி கோரி பெண்கள் நூதன போராட்டம். 30 ஆண்டுகளாக சாலை பராமரிக்கப்படாததால் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.