ஆகஸ்ட் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - விழுப்புரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் 'தாயுமானவர்' திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; குறைபாடுகளைக் களைய வேண்டும்.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதிய நிலுவைத்தொகை மற்றும் நிதிப் பயன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மாவட அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வு அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இணையாக பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த 15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால், ஆகஸ்டு 3-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்!
#VillupuramNews #TN32News #CooperativeBank #Protest #VillupuramDistrict #TNNews #CooperativeEmployees #StrikeAlert #villupurammakeupartist