பண்ருட்டி: பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெய்வேலி தெர்மல் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முருகன் கோவில் ஆர்டிஓ ஆபீஸ் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டிய 5 பேரை கைது செய்தனர். இதில் ராஜசேகர், நித்தி மற்றும் ராகுல் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்பி பரிந்துரையின் பேரில் மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.