பண்ருட்டி: நெல்லிக்குப்பம் திமுக அலுவலகத்தில் அக்கட்சியைச் சார்ந்தவர்களே அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நெல்லிக்குப்பம் நகர திமுக அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும்,கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன சிவெ.கணேசன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.அப்பொழுது திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் நகர திமுக செயலாளர் மணிவண்ணன் ஆகியோரின் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.