பண்ருட்டி: பண்ருட்டி அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேல் காவடி எடுத்தும், தேரை வடம் பிடித்து இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
பண்ருட்டி அய்யனார் கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.இதனையொட்டி கோயிலில் ராட்சத அலகு போட்டு வரும் பக்தர்கள் வள்ளி தெய்வானை சமேதஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.