பண்ருட்டி: சிறுவத்தூர் பாலமுருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேல் காவடி மற்றும் தீமிதி திருவிழா
பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 74ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான தீமிதி திருவிழா மற்றும் வேல் காவடி எடுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேல் காவடி எடுத்தும், தீமிதித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.