வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய எம்.எல்.ஏ.
வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பி.பாரூக் பாஷா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.