விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு மகா சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றது.இதனை ஒட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகாரதனை நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் திரளானபக்தர்கள் பங்கேற்றனர்