விருத்தாசலம்: விருத்தாச்சலம் நாச்சியார் பேட்டை ரயில்வே கேட் அருகில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிந்ததால் பரப்பு;அரைமணி நேரம் போராடி தீ அணைப்பு
விருத்தாசலம் ரயில் நிலையம் அருகில் நாச்சியார் பேட்டை ரயில்வே கேட் அருகில் குப்பை கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த நிலையில் அவை திடீரென தீ பிடித்து எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.