விருத்தாசலம்: கோமங்களம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
கோமங்களம் அருகே கோழிகளை வியாபாரத்திற்காக ஏற்றி வந்த மினி லாரி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்பக்கமாக மோதியது. இதில் மினி லாரி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், இந்த விபத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விருத்தாச்சலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.