விருத்தாசலம்: மாத்தூர் கிராம அருகிலுள்ள ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்த நிலையில் மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்
மங்கலம் பேட்டை அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தில் இருக்கின்ற அரிவேரி என்ற எரியில் உள்ள விழல்கள் எதிர்பாரா வண்ணம் தீபிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளது.இது பற்றிய தகவல் ஊர்மக்கள் மூலமாக மங்கலம்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விழலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அனைக்கப்பட்டது.