தரங்கம்பாடி: நண்டலாறு காவல் சோதனை சாவடியில் அமைச்சர் மெய்யநாதன் காரை நிறுத்தி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தரங்கம்பாடி சந்திரபாடி குட்டியாண்டியூர் வெள்ளகோவில் புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்த பின் நண்டலாறு காவல் சோதனை சாவடியில் சென்ற போது அமைச்சர் மெய்யநாதனினின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.