நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் தொடங்கிய 470-ஆவது கந்தூரி விழா - பாய்மரம் ஏற்றி கோலாகல தொடக்கம்
நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-ஆவது கந்தூரி விழா, மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் சனிக்கிழமை தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழா, நாகை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.