விருத்தாசலம்: பாலக்கரை பகுதிகளில் கடலூர் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக MLA அருண்மொழித்தேவன் வாக்கு சேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகின்றது.இதன்படி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிடுகின்றார்.அவருக்கு விருதாச்சலம் நகரப் பகுதியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் வேட்பாளர் சிவகொழுந்துவிற்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்