விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தாம்பிகை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
விருதாச்சலம் விருத்தாம்பிகை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ,விவிபாட் கருவிகள் ஆகியவற்றை கையாள தெரியுமா என பணியாளர்களிடம் கேட்டு அது குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார்.