விருத்தாசலம்: விருத்தாச்சலம் புதுக்கூரைப்பேட்டை,உள்ளிட்ட பகுதிகளில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர் பாராளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி பாமக வேட்பாளரும்,திரைப்பட இயக்குனரும்மான தங்கர் பச்சான், விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதுகூரைப்பேட்டை, கு.நல்லூர், குப்பநத்தம், சின்னகாண்டியாங்குப்பம், காணாதுகண்டான், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியும் ,வீடு, வீடாகவும்,நியாய விலை கடை பொதுமக்கள் கூடும் பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து கடலூர் மாவட்டத்தை உயர்த்த பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.