ஆவுடையார் கோவில்: திருப்புனவாசல் பிடாரியம்மன் பெரிய கருப்பர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தேறின
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா திருமண வாசலில் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் பெரிய கருப்பர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றன. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கும்பாபிஷேகம் பங்கேற்று கடவுளை வழிபட்டனர். அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.