தரங்கம்பாடி: காலமநல்லூர் ஊராட்சியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் காலமநல்லூர் ஊராட்சியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.