நிலக்கோட்டை: நிலக்கோட்டை டாஸ்மாக் கடைகளில் ஜிபேவுக்கு எதிர்ப்பு; மதுப்பிரியர்களுடன் ஊழியர்கள் வாக்குவாதம்!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடைகளில் ஜிபே மூலம் பணம் பெற விற்பனையாளர்கள் மறுப்பதால் மதுப்பிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.