பழனி: பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.