அணைக்கட்டு: வேலூர்: பப்பாளி தோட்டங்களை நாசம் செய்யும் ஆப்பிரிக்க நத்தைகள் - 10 ஏக்கர் பயிர் பாதிப்பு!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே ஆப்பிரிக்க நத்தைகள் படையெடுத்ததால் 10 ஏக்கர் பப்பாளி பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, நத்தைகளை அழிக்க உப்பு கரைசல் முறை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளனர்.