திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: 50 கிலோ கொழுக்கட்டையில் பிரம்மாண்ட விநாயகர்! பொதுமக்கள் வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் குமரன்திருநகர் செல்வ விநாயகர் கோவிலில் 50 கிலோ கொழுக்கட்டையால் செய்யப்பட்ட 2 அடி உயர விநாயகர் சிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது. 3 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.