பண்ருட்டி: கடலூரில் NLC விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படாது என்று அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம்- MLA வேல்முருகன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து எம்.எல்.ஏ வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக, நிலம் கையகப்படுத்தப்படாது என்ற அறிவிப்பு இல்லாததும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அதே போன்று, பண்ருட்டியில் முந்திரி, பலா உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வேளாண் கல்லூரி அமைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.