நத்தம்: நத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திண்டுக்கல்-காரைக்குடி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உடல்கள் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.